அமெரிக்க வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபர்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் மர்ம நபர் ஒருவர் தன் முதுகுப் பையோடு நுழைந்துள்ளார். உலகின் மிக அதிக பாதுகாப்புக் கொண்ட இடமாக கருதப்படும் வெள்ளை மாளிகையின் தெற்கு வாசல் பக்கமாக அந்த நபர் நுழைந்துள்ளார். அவர் நுழையும் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மாளிகையினுள் தான் இருந்திருக்கிறார். 

கலிபோர்னியா மாகாணத்தின் லைசென்ஸை அந்த நபர் வைத்திருந்துள்ளார். அவரின் பெயர் மற்றும் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவரிடம் எந்தவொரு ஆயுதங்களோ மற்ற ஆபத்தான பொருட்களோ இல்லை. " ட்ரம்ப் என் நண்பர். அவரைப் பார்க்க சுவர் எகிறி வந்தேன்" என்று அவர் சொல்லியதாக வெள்ளை மாளிகை பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தி அதிபர் ட்ரம்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளை மாளிகைக்கு உச்சபட்ச பாதுகாப்பான "ஆரஞ்ச்" பாதுகாப்பு நிலை பிரகடனப்படுத்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!