ஏழு ஆண்டு சிறைத் தண்டனைபெற்ற பெண்ணுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய புதின்!

ரஷ்ய நாட்டில், ராஜ துரோகம் செய்த குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆக்சானா (Oxana Sevastidi) என்னும் பெண்ணுக்கு, அந்நாடு அதிபர் விளாடிமிர் புதின் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 

putin

கடந்த 2008-ம் ஆண்டு ரஷ்யாவுக்கும், ஜார்ஜியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்தக் காட்சியைக் கண்ட ஆக்சானா, ஜார்ஜியாவில் உள்ள தனது தோழிக்கு, ‘உங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க, பயங்கர ஆயுதங்களுடன் ரஷ்யாவில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டுள்ளது’, என்று  அவசர செய்தி அனுப்பியுள்ளார். இது, ரஷ்ய அரசுக்குத் தெரியவந்து, தேசத் துரோக குற்றத்துக்காக 2015-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.

2016-ம் ஆண்டு அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையிலிருந்து விலக்களிக்குமாறு புதினுக்கு ஆக்சானா கோரிக்கை மனு அனுப்பினார்.   அதற்கு செவிசாய்த்து, ஆக்சானவுக்கு பொது மன்னிப்பு வழங்கிட புதின் உத்தரவிட்டுள்ளார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!