வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (13/03/2017)

கடைசி தொடர்பு:18:02 (13/03/2017)

2030-ன் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு 3-ம் இடம்!

உலக அளவில் நிதி சம்பந்தமான சேவைகள் வழங்குவதில் முன்னணியில் இருக்கும் PricewaterhouseCoopers என்ற நிறுவனம், 2030-ம் ஆண்டு எந்தெந்த நாடுகளில் மிக சக்தி வாய்ந்த பொருளாதாரம் இருக்கும் என்று உத்தேசப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. 

இந்தப் பட்டியல் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய 4 ஆசிய நாடுகள் உள்ளன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க