வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (16/03/2017)

கடைசி தொடர்பு:08:32 (17/03/2017)

பிரான்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு... இருவருக்கு காயம்!

துப்பாக்கிச்சூடு

பிரான்ஸ் நாட்டின் தெற்கில் இருக்கும் கிராசே (Grasse) என்னும் ஊரில் உள்ள பள்ளியில், மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அவரின் இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. துப்பாக்கிச்சூட்டினால், இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை பிரான்ஸ் போலீஸ் கைதுசெய்துள்ளது. இந்தத் திடீர் துப்பாக்கிச்சூட்டினால், பிரான்ஸில் பரபரப்பு நிலவி வருகிறது.