வெளிநாடுகளுக்கான நிதியைக் குறைக்க ட்ரம்ப் திட்டம் - ஐ.நா அதிருப்தி!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முதல் பட்ஜெட் பரிந்துரைகளை 1.15 ட்ரில்லியன் டாலர் மதிப்பீட்டில் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

ட்ரம்ப்பின் முதல் பட்ஜெட்டில், வெளிநாடுகளுக்கான நிதியுதவியைப் பெருமளவில் குறைக்க உள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு அளிக்கும் நிதியில், 20 சதவிகிதம் வரை குறைக்க முடிவுசெய்துள்ளனராம். இதனால், பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Trump Budget

 

அது மட்டுமின்றி ஐ.நா. திட்டங்களுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதியைக் குறைக்கவும், ட்ரம்ப் அரசாங்கம் பரிந்துரைசெய்துள்ளது. இதனால், நீண்ட கால சீர்திருத்த முயற்சிகள் பாதிக்கப்படும் என்று ஐ.நா. தலைவர் அன்டோனியோவின் செய்தித் தொடர்பாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!