வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளை மாளிகையில் கார் டிரைவராகப் பணியாற்றும் ஊழியருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சிரியா, லிபியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரமுடியாதபடி சட்டங்களைப் பிறப்பித்தார்.

இதுபோன்ற பல சம்பவங்களால் ட்ரம்பிற்கு மிரட்டல் இருப்பதாக தகவல் வெளியாயின. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கார் டிரைவராகப் பணியாற்றும் ஊழியருக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து அவருடைய கார் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டது. காரில் வெடிகுண்டுக்கான தடயங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையைச் சுற்றிய தெருக்களில் வாகனங்கள் செல்லாதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!