Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனா-அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு...!

அமெரிக்காவின் செயலாளர் ( Secretary of State), ரெக்ஸ் டில்லர்சன் சீன அதிபர் சீ ஜின்பிங்கை (Xi Jinping) இன்று சந்தித்தார். இருவரும், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வெளியுறவுக் கொள்கைகள் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடி உள்ளனர்.

சந்திப்புக்குப் பின்னர் சீன அதிபர் ஜின்பிங், 'அமெரிக்க மற்றும் சீனா மிகவும் ஒழுங்காகவும் உணர்வுபூர்வமாகவும் அனைத்து விஷயங்களையும் கையாள வேண்டும். இது இருநாட்டு உறவுக்கும் ஒரு புதுவித துவக்கமாக இருக்கும்.' என்று கூறினார்.

இதுகுறித்து அமெரிக்காவின் செயலாளர் டில்லர்சன், 'தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம், சீன-அமெரிக்க உறவுக்குள் நல்ல புரிதல் வரும் என்று நம்புகிறோம். இது, இரு நாட்டு உறவுகள் வலுவடைய வித்திடும்.' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் சீ ஜின்பிங் அடுத்த மாதம் அமெரிக்காவில் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement