வெளியிடப்பட்ட நேரம்: 00:24 (20/03/2017)

கடைசி தொடர்பு:07:40 (20/03/2017)

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் வெடிகுண்டு ஒன்று வெடிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை கார் டிரைவருக்கு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளை மாளிகையில் சோதனையிட்டதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.