வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (22/03/2017)

கடைசி தொடர்பு:17:48 (22/03/2017)

’2017-ம் ஆண்டு அதிதீவிர காலநிலை மாற்றங்களைச் சந்திக்கும்’... திடுக் ரிபோர்ட்!

வெப்பநிலை மாற்றங்கள் குறித்து உலக வளிமண்டலவியல் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இதுவரையில் அதிக வெப்பமான ஆண்டாக 2016 திகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  2017-ம் ஆண்டு கடந்த ஆண்டை விட அதிதீவிர காலநிலை மாற்றங்களைச் சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Climate Change


ஸ்விஸ் நாட்டினை தலைமையிடமாகக் கொண்ட ’உலக வளிமண்டலவியல் அமைப்பு’ கடந்த செவ்வாய்க்கிழமை உலக காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஆய்வறிக்கையினை வெளியிட்டது. 80 நாடுகளின் வெப்பநிலை மாற்றங்களைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், ”இதுவரையில் அதிக வெப்பமான ஆண்டாக 2016-ம் ஆண்டு திகழ்ந்துள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டு அதிதீவிர காலநிலை மாற்றங்களைச் சந்திக்கும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக வெப்பமயமாதல் மட்டுமின்றி வெள்ளம், புயல், வறட்சி என இயற்கைச் சீற்றங்களும் பேரிழப்பினை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

''ஆர்டிக், அண்டார்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட வெப்ப அலைகள், வட அமெரிக்க நாடுகளில் தென்பட்ட அதீத வெப்பநிலை, அரேபிய நாடுகளை வாட்டும் கடுங்குளிர் என உலக காலநிலை மாற்றத்தின் அறிகுறிகள் ஏராளம். மேலும் சீர்கெடும் சுற்றுச்சூழல், கரிய அமில வாயுவின் அதீத வெளிப்பாடு ஆகியவை தட்ப வெட்ப மாற்றங்களின் முக்கிய காரணங்களாக திகழ்கின்றது. மேலும் இந்த தட்ப வெட்ப மாற்றங்களின் முக்கிய காரணி மனித ஆதிக்கம் தான்'' என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க