வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (22/03/2017)

கடைசி தொடர்பு:22:08 (22/03/2017)

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு...!

UK

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து இங்கிலாந்து போலீஸார், 'இதை ஒரு தீவிரவாத நடவடிக்கையாகத்தான் தற்போது அணுகுகிறோம்.' என்று கூறியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அவை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'வளாகத்துக்குள் ஒரு போலீஸார் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்' என்று கூறியுள்ளார். மேலும், ஒரு வாகனம் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மோதியதால் 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.