Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் மிக நீளமான கட்டடம் ‘தி பிக் பெண்ட்’

உலகின் மிக நீளமான கட்டடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான வடிமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

U-shaped skyscraper
 

உலகின் உயரமான கட்டடமான துபாயின் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு நீளமான கட்டடத்தை நியூயார்க்கில் அமைக்கத் திட்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘தி பிக் பெண்ட்’ எனப் பெயர் சூட்டப்படவிருக்கும் இக்கட்டடம் ஆங்கில எழுத்து ‘யு’ வடிவ வளைவு போன்று கட்டமைக்கப்படவிருக்கிறது. 

4,000 அடி நீளம் (1.22km) இக்கட்டடத்தை ‘யு’ வடிவில் வளைத்து அமைக்கவுள்ளனர். ஓயோ ஸ்டூடியோ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டடத்தில், வளைவுகளில் செல்வதற்கான ‘லிஃப்ட்’ வசதியும் செய்யப்படவுள்ளது. நியூயார்க்கின் மான்ஹட்டான் நகரில் இருக்கும் ’உயர்ந்த கட்டடங்களுக்கான தளர்வு’ விதிகளுக்கு இக்கட்டடம் மாற்றாக அமைந்துள்ளது. 4,000 அடி உயரமான கட்டடமாக இல்லாமல் 4,000 அடி நீளமான கட்டடமாக நிலைநிறுத்தவுள்ளனர். நியூயார்க் கட்டடக்கலைக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த வடிவமைப்பின் கட்டமைப்புக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement