Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவில் இந்தியப் பெண், குழந்தை மர்ம நபர்களால் கொலை!

அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் இந்தியப் பெண் பொறியாளர் தன் மகனுடன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிலுள்ள அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநகரில் வசிப்பவர் ஆந்திராவைச் சேர்ந்த மென்பொறியாளார் ஹனுமந்த ராவ். இவரது மனைவி சசிகலா (40). வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை பூட்டிய வீட்டுக்குள் சசிகலாவும் அவரது மகனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த ஹனுமந்த ராவ் ஆந்திராவிலுள்ள தன் குடும்பத்தாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் சாம்பசிவ ராவ் இச்சம்பவம் குறித்து ’வட அமெரிக்க தெலுங்கு சங்கம்’ மூலம் விசாரித்துள்ளார்.  விசாரணையில் மர்ம நபர்களால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது.

இம்மாதிரியாக மர்மமான முறையில் அமெரிக்காவில் இந்தியர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement