வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (25/03/2017)

கடைசி தொடர்பு:12:44 (25/03/2017)

நிஜ சூரியனை மிஞ்சிய ‘செயற்கை சூரியன்’

உலகிலேயே மிகப்பெரிய சூரியனை உதிக்க வைத்துள்ளனர் ஜெர்மனி அறிவியல் ஆய்வாளர்கள். சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த செயற்கை சூரியன் ஜெர்மன் விண்வெளி மையத்தில் சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

artificial sun rises in Germany

ஜெர்மன் விண்வெளி ஆய்வாளர்கள் இணைந்து 149 சக்திவாய்ந்த செனான் மின்விளக்குகளால் உலகின் மிகப்பெரிய சூரியனை உதிக்கவைத்துள்ளனர். சூரிய எரிபொருள் உற்பத்தி பயன்பாட்டிற்கான இந்த சோதனை முயற்சி வருங்காலத்தில் உலகின் ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ உற்பத்திசெய்யும் கூடமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சூரிய எரிபொருள்களில் முக்கியமான ஹைட்ரஜன் உற்பத்தியை இந்தச் செயற்கை சூரியன் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ’கார்பன்-டை-ஆக்ஸைட்’ வெளிப்படாமல் செயல்படும் ஆற்றல் நிறைந்தது ஹைட்ரஜன் என்பதால் எதிர்காலத்தின் அதிமுக்கிய எரிபொருளாக வாய்ப்புள்ளது.

ஒரே ஸ்விட்சில் 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் இந்த செயற்கை சூரியன் சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையம்.