வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (25/03/2017)

கடைசி தொடர்பு:15:50 (25/03/2017)

உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் எஸ்.பி.ஐ. தலைவர்

பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள ’உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியலில் எஸ்.பி.ஐ. தலைவர்  அருந்ததி பட்டாச்சார்யா 26வது இடம் பிடித்துள்ளார். 

பார்ச்சூன் இதழின் ’உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியலின் நான்காம் ஆண்டு பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி பட்டாச்சார்யா 26வது இடம் பிடித்துள்ளார். இவர், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் ஆவார். எஸ்.பி.ஐ வங்கியின் முன்னேற்றத்துக்காக பல்வேறு கட்டத்தில் துரிதமாக செயல்பட்டவர் எனப் பலராலும் பாராட்டப்படும் பட்டாச்சார்யாவை பார்ச்சூன் இதழ் கவுரவித்துள்ளது.

மேலும், பட்டியலின் முதலிடத்தில் அமெரிக்காவின் பேஸ்பால் நிர்வாகி தியோ எப்ஸ்டீன் உள்ளார். ரோம் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்ஸிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த 50 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே கார்ப்ரேட் பெண் தலைவர் எனவும், ஒரு இந்திய வங்கியின் பெண் தலைவர் இப்பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல்முறை என்றும் குறிப்பிட்டு அறிவித்துள்ளது பார்ச்சூன்.