இனி கமன்ட்களில் GIF... இது ஃபேஸ்புக் அதிரடி!

ஃபேஸ்புக்

சமூக ஊடகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. யூத்களும் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என்று தங்களை சுருக்கிக் கொள்ளாமல், தங்கள் மொபைல்களில் பல்வேறு புது சமூக வலைதளங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இருப்பினும், எல்லாவற்றுக்கும் தலையாய சமூக வலைதளமான ஃபேஸ்புக், தொடர்ச்சியாக பல புதுமைகளை புகுத்தி வருகிறது. இதனால், அதன் இடத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தற்போது ஃபேஸ்புக் அடுத்த அதிரடியாக, ஷேர் செய்யும் போஸ்ட்களுக்கு, GIF ஃபைல்களை கமன்ட் செய்யும் வசதியை டெஸ்ட் செய்ய உள்ளதாம்.

இது பற்றி ஃபேஸ்புக் நிறுவன வட்டாரம், 'ஒரு நல்ல GIF ஃபைல் அனைவருக்கும் பிடிக்கும். எனவே, GIF-களை மக்கள் கமன்ட்களில் பயன்படுத்த விருப்பப்படுவர். இதையொட்டி, கமன்ட்களில் GIF ஃபைல்களை பதிவேற்றும் வசதியை சோதித்து வருகிறோம்' என்று கூறுகின்றது.

விரைவில், ஃபேஸ்புக்கில் தரவேற்றப்படும் போஸ்ட்களுக்கு GIF-கள் மூலம் கமன்ட் செய்து நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!