அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி இலங்கை பயணம் ரத்து - லைக்கா | Lyca slams TN Politicians on Rajinikanth Srilanka visit canceled issue

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (26/03/2017)

கடைசி தொடர்பு:10:07 (26/03/2017)

அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி இலங்கை பயணம் ரத்து - லைக்கா

ரஜினிகாந்தின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து, லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Lyca

லைக்கா நிறுவனம் சார்பில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை, அங்குள்ள தமிழர்களுக்கு வழங்குவதற்காக, ரஜினி வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி இலங்கை செல்வதாக இருந்தது. இந்நிலையில், இதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் ரஜினி இலங்கை செல்லக் கூடாது என்று கூறி வந்தனர். இதையடுத்து, ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து லைக்கா நிறுவனம் தற்போது, விளக்கமளித்துள்ளது. அதில், 'தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின், இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுயலாபத்திற்காக சிலர் பரப்பும் வதந்திகளை, அரசியல்வாதிகள் ஆதரிக்கின்றனர். அரசியல்வாதிகளும் வதந்திகளை பரப்புவதாக சந்தேகம் எழுந்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் எதுவும் செய்யவில்லை. 

எங்களது திட்டத்தில் எந்த நோக்கமும் இல்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் வீடுகளை கட்டிக்கொடுக்கிறோம். ரஜினியின் வருகையின்போது மேலும் பல நலத்திட்டங்களை தொடங்க இருந்தோம். இதில், ரஜினிகாந்துக்கு தர்மசங்கடமான நிலை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சேவுடன் எங்களுக்கு தொழில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. எங்களது தொழில் போட்டியாளர்களும் கட்டுக்கதைகளை பரப்பினர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அரசியல் தலைவர்களை பாராட்டுகிறோம். ஆனால், இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும், ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் திட்டமிட்டபடி, ஏப்ரல் 10-ம் தேதி தமிழர்களுக்கு வீடு வழங்கப்படும்' என்று கூறியுள்ளது.


[X] Close

[X] Close