வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (26/03/2017)

கடைசி தொடர்பு:11:39 (26/03/2017)

அமெரிக்கா வான்வழி தாக்குதல்: அல்கொய்தா தலைவர் பலி!

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், அல்கொய்தா தலைவர் காரியாசின் கொல்லப்பட்டார்.

US airstrike kills, Alqaeda leader in Afganisthan

தீவிரவாதிகளை அழிப்பதற்காக ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி, ஆப்கானிஸ்தானின் பத்திகா மாகாணத்தில், அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக, தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து அங்கு, அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஏற்கெனவே முகமது யாசின் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டதாக, கடந்த சில நாள்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் அல்கொய்தா தலைவர் காரியாசின் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. இவர் கடந்த 2008-ல் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் உள்பட 50 உயிரிழந்த சம்பவம்.  2009-ல் பாகிஸ்தான்., சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் ஆகியவற்றில் முக்கிய நபராக செயல்பட்டவர் ஆவார்.