வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (26/03/2017)

கடைசி தொடர்பு:11:05 (26/03/2017)

’லண்டன் தாக்குதல் நடத்தியது ’தனிஒருவன்’

நான்கு பேரின் உயிரை பலி வாங்கிய லண்டன் தீவிரவாத தாக்குதலை நடத்திய ’காலித் மசூத்’ எந்த தீவிரவாத அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை என்று புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

London attack


கடந்த புதன்கிழமை மர்ம நபர் ஒருவர், வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மீது, வேகமாக கரை ஓட்டி வந்து சாலையோரம் இருந்தவர்கள் மீது செலுத்தினார். அதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதே நபர், லண்டன் நாடாளுமன்றம் சென்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். அந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். நாடாளுமன்றத்தில் இருந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுட்டு வீழ்த்தினர். அந்த மர்ம நபர் காலித் மசூத் என்பது பின்னர் அடையாளம் காணப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் கொலையாளியுடன் சேர்த்து ஐந்து பேர் உயிரிழந்தனர் 

இதனை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக காலித் மசூதின் வாட்ஸ் அப், போன் உரையாடல்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. அவர் எந்த தீவிரவாத அமைப்பின் கீழும் பணியாற்றவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மசூத் இந்த தாக்குதலை தனித்து நடத்துவதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து கேள்விக்குறியாகவே உள்ளதாக லண்டன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலுன் இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக தீவிர தாக்குதல் சம்பவங்கள் நடைபெற வாய்பில்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க