Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலியாவில், இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஹோபார்ட் நகரத்தில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த லீ மேக்ஸ் ஜாய் மீது, அடையாளம் தெரியாத ஆஸ்திரேலியர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹோபார்ட் நகரில் இருக்கும் மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில், காபி வாங்கச் சென்றபோது, அவரை நோக்கி வந்த ஐந்து ஆஸ்திரேலியர்கள், நிற அடிப்படையில் ஜாயைத் திட்டியதோடு தாக்கியும் உள்ளனர். இதையடுத்து, பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸுக்கு போன் செய்யவே, தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். பின்னர், மறுபடியும் அங்கு வந்து ஜாயை அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலால், ஜாய்க்கு காயம் ஏற்பட்டது. அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 'என்னைத் தாக்கியவர்களில் ஒரு பெண்ணும் இருந்தார். அவர்கள், மெக் டொனால்ட்ஸில் வேலை செய்யும் ஒருவர் மீது கோபமாக இருந்தனர். ஆனால், அந்தக் கோபத்தை என்னிடத்தில் காட்டிவிட்டனர். இதுவரை என்னைத் தாக்கியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையையும் ஆஸ்திரேலிய அரசு தரப்பு எடுக்கவில்லை' என்று கூறினார். 

இந்தச் சம்பவத்துக்கு, கேரளாவின் கோட்டயம் எம்பி., ஜோஸ்.கே.மணி, கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வெளியுறவு அமைச்சகம் மூலம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement