உலகின் முதல் நானோ கார் பந்தயம்!

மூலக்கூறு அணுக்களாலான நானோ கார் பந்தயம், உலகிலேயே முதன்முறையாக பிரான்ஸில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, பிரத்யேக நுண்ணோக்கிகொண்டு ஆட்டத்தை ஒருங்கிணைக்க, பிரான்ஸின் அறிவியல் ஆய்வு மையம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

nano car

பிரான்ஸ் நாட்டின் தேசிய அறிவியல் ஆய்வு மையம் (CNRS), உலகிலேயே முதல்முறையாக சிறிய மூலக்கூறு அணுத்துகள்களாலான நானோ கார் பந்தயத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பந்தயத்துக்காக, 100 நானோ மீட்டர் நீளம்கொண்ட ஆட்டக்களம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பந்தயக் களம், தங்க அணுக்களாலானது. நான்கு போட்டியாளர்கள் ஒரே களத்தில் பங்குபெறும் முதல் போட்டியை ஒருங்கிணைத்து, வெற்றியாளர்களைத் தீர்மானிக்க, நுண்ணிய பல்முனை மைக்ரோஸ்கோப் தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய அறிவியல் தொழில்நுட்பத்துக்கு சவால் விடும் இந்தப் போட்டியை, நானோ யூ-ட்யூப் கார் ரேஸ் சேனலில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மூலக்கூறு இயந்திரத் துறையில், அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் நேரமாக, இப்போட்டியை அறிவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏப்ரல் 28-ம் தேதி தொடங்கும் இப்போட்டி, வெறும் பந்தயமாக இல்லாமல் இயந்திரவியல் துறையில் நானோ மூலக்கூறு அணுக்களின் பயன்பாட்டைச் சோதிப்பதற்கான ஆய்வாக மேற்கொள்ளப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!