அலுவலகத்தில் மதியம் தூங்கினால் இது அதிகரிக்கும்!

அலுவலகத்தில், மதிய வேளையில் போடும் குட்டித்தூக்கம், 'படைப்பாற்றலை அதிகரிக்கும்' என இங்கிலாந்து லீட் பல்கலைக்கழக ஆய்வு  தெரிவித்துள்ளது.

Afternoon nap

தினமும் மதிய வேளையில், அலுவல்களுக்கு நடுவே 20 நிமிடம் தூங்கினால், வேலை செய்வோரின் திறன் அதிகரிப்பதாக இங்கிலாந்து லீட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூக்கம், ஊழியர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதுடன், முடிவெடுக்கும் திறனையும் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மதிய நேர குட்டித்தூக்கத்தால், மன அழுத்தம் குறைவதுடன், இதய நோய் பாதிப்புகள், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவை வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!