44 ஆண்டுகால உறவு முறிந்தது!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான பிரெக்சிட் மசோதாவுக்கு, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டதால், தற்போது அதிகாரப்பூர்வமாக விலகுவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

therasa

44 ஆண்டு காலமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருந்துவந்த பிரிட்டன், தற்போது  ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் உடன்படிக்கை (EU's Lisbon Treaty )  50-வது விதியின் சட்டப்படி, பிரிட்டன் விலகுவதாக அறிவித்துள்ளது. இரண்டு வருடங்களில் வர்த்தகம், இடம்பெயர்வு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை சார்ந்த சட்ட நடைமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, முழுவதுமாக பிரிட்டன் விலகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இனி என்றுமே திரும்பப் போவதில்லை’ என வெளியேற்றம் குறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!