’பிரெக்சிட்’க்கு உதவிய 50-ம் விதி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகக் கருதப்படும் ’பிரெக்சிட்’ வெளியேற்றத்தை சாத்தியப்படுத்தியது விதி எண் 50.

article 50

பிரிட்டன் பிரிவதற்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய பின் நிறைவேற்றப்பட்ட பிரெக்சிட் மசோதாவை, நடைமுறைப்படுத்துவதற்கு உதவியது லிஸ்பன் உடன்படிக்கை (EU's Lisbon Treaty )  50-வது விதி. 250 வார்த்தைகள் நிறைந்த இந்த 50-ம் விதிதான், பிரிட்டன் தனி நாடாவதற்கான உரிமையை வழங்கியுள்ளது.

லிஸ்பன் உடன்படிக்கை விதி 50-ன் படி, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள எந்தவொரு நாடும் விரும்பினால், 'நாடாளுமன்ற ஒப்புதலுடன் தனித்துச் செயல்படும் நாடு' என்ற உரிமையைப் பெறும். தற்போது, பிரிட்டன் தனது சொந்த அரசியலமைப்புச் சட்டத்துடன் வெளியேறலாம். மேலும், இவ்விதிப்படி வெளியேறும் நாட்டுக்கு இரண்டு வருட காலம் வர்த்தகம், இடம்பெயர்வு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை சார்ந்த சட்டநடைமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட, பேச்சுவார்த்தைக் கால அவகாசம் வழங்கப்படும். தவறும் பட்சத்தில், எவ்வித புதிய ஒதுக்கீடுகளும் வழங்கப்பட மாட்டாது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள இந்த 50-ம் விதியை உபயோகிக்கும் முதல் நாடு, பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!