வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (30/03/2017)

கடைசி தொடர்பு:09:29 (31/03/2017)

அமெரிக்க அதிபரைச் சந்திக்கிறார், சீன அதிபர்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, சீன அதிபர் ஜின்பிங் முதன்முறையாகச் சந்திக்க உள்ளார்.

Trump Jiping

சீன அதிபர் ஜின்பிங், ஏப்ரல் 6 -7 தேதிகளில், அமெரிக்க அதிபரை பிளோரிடாவில் சந்திக்க உள்ளதாக சீன வெளியுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக முக்கியமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, சீனாவின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தார், அதிபர் ட்ரம்ப். மேலும், சீனாவின் இறக்குமதிப் பொருள்கள் மீதான வரியை அதிகப்படுத்தப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், வட கொரியாவுக்கு பொருளாதாரரீதியாக சீனா உதவுவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், சீன அதிபர் ஃப்ளோரிடாவில் ட்ரம்ப்பைச் சந்திக்கவிருப்பதாக, சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, அதிபர் ஜின்பிங், பின்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அதிபர்களின் சந்திப்புமூலம், தென் சீனக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, இரு நாட்டு உறவுகளுக்குள்ளும் சுமூகமான நட்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.