ஈராக் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் முக்கிய தலைவர்கள் பலி 

ஈராக் விமானப்படை மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் துணை தலைவர் அயத்-அல்-ஜுமைலி உட்பட பல முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ISIS
 

சிரியா உள்நாட்டுப் போரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக அமெரிக்க ஈராக் படைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஈராக் விமான படை, அல்-குயிம் என்னும் பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவராகிய அயத் அல் ஜுமைலி உட்பட 40 கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட அல்-ஜுமைலி, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல்-பக்தாதியின் துணை தளபதியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அல்-ஜுமைலி சதாம் ஹுசேன் தலைமையின் கீழ் புலனாய்வு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் வசம் உள்ள மோசூல் நகரை மீட்க அமெரிக்க-ஈராக் படைகள் தொடர்ந்து போராடி வருகின்றன.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐ.எஸ் அமைப்பை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற விமான படை தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதால் சிரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து நடந்து வரும் போர் காரணமாக இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிரியாவை விட்டு சென்றுள்ளனர்.         
    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!