ரஷ்ய மெட்ரோ ரயிலில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது | Bomb blast at Russian Metro train

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (04/04/2017)

கடைசி தொடர்பு:09:15 (04/04/2017)

ரஷ்ய மெட்ரோ ரயிலில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது

Bomb blast at Russian Metro train

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் மெட்ரோ ரயிலில் குண்டு வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 45 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. 

பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தபோது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்த நகரத்தில்தான் இருந்துள்ளார். குண்டு வெடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதும், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். 

ஐ.எஸ் அமைப்பு இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

ஆனால், இதுவரை இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு, எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ரஷ்ய அரசு இதை ஒரு தீவிரவாத நடவடிக்கை என்ற கோணத்தில் அணுகி, விசாரணை நடத்திவருகிறது.