சீனாவில் உருவாகிறது புதிய மெகா நகரம்!

அதிவேக ரயில், மிகப் பெரிய கட்டடம் என உலகில் உள்ள பல நாடுகளின் சிறப்புகளை எல்லாம் முறியடிக்கும் விதமாக, தங்கள் நாட்டில் புதிய விஷயங்களை உருவாக்கி, மற்ற நாடுகள் மத்தியில் தங்களை முன்னிலைப்படுத்தி, வல்லரசாகக் காட்டிக்கொள்வது சீனாவின் ஸ்டைல். அந்த வகையில், சீனாவின் அடுத்த இலக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரம். 

சீனாவின் அதிகாரபூர்வ அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 'பெய்ஜிங்கில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் புதிய நகரத்தை உருவாக்குவது சம்பந்தமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய சீன அதிபர், 'புதிதாக உருவாக்கப்படும் இந்த நகரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் புதிய நகரம் இருக்கும்' என்றார். 

இந்தப் புதிய நகரம், அமெரிக்காவின் நியூயார்க்கைவிட மூன்று மடங்கு பெரியதாக இருக்குமாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!