நைஜீரியாவில் 336 குழந்தைகள் பரிதாப மரணம்!

நைஜீரியா நாட்டின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களில், கடந்த டிசம்பர் மாதம் முதல் மூளைக்காய்ச்சல் தொற்றுநோய் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 336 குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் 5 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அதிகம். மேலும், 3000-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். 

நைஜீரியா அரசும் சர்வதேச சுகாதார அமைப்புகளும் இணைந்து, மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகிறது. சுமார் 5 லட்சம் நோய்த் தடுப்பு மருந்துகள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் இரண்டு மில்லியன் தடுப்பு மருந்துகள் தேவைப்படுகின்றன. மருந்துக்கான தட்டுப்பாடு காரணமாகத் திணறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூளைக்காய்ச்சல் நோய், அருகில் உள்ள நாடுகளுக்கும் பரவலாம் என்பதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. 

ஏற்கெனவே, 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்த நோய்க்கு, நைஜீரியாவில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். அந்த நிலை இப்போது ஏற்படக்கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!