உலகை அதிரவைத்துள்ள சிரியா ரசாயனத் தாக்குதல்: ஐ.நா கடும் கண்டனம்!

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன வெடிகுண்டுத் தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து விவாதிக்க, இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக் கூடுகிறது.

Syria Chemical attack
 

சிரியாவின் இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் என்னும் நகரில், நேற்று ரசாயன வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து, சிரியா அரசுக்குச் சொந்தமான விமானப்படையின் போர் வீரர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 20 குழந்தைகள் பலியாகியிருப்பதாகவும் ஐ.நா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Syria chemical attackசிரியாவில் நடத்தப்பட்ட இந்த ரசாயன வெடிகுண்டுத் தாக்குதல், உலக அரங்குகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஐ.நா அமைப்புகள், இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், சிரியா ராணுவம் இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று மறுத்துவருகிறது.

இந்தச் சம்பவத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.நா, சிரியா ராணுவம் குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து, விமானம்மூலம் அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வீசியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரம்குறித்து விவாதிக்க, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாகக் கூடுவதாகவும் அறிவித்துள்ளது!

நன்றி : Reuters

Do you like the story?

Please Appreciate the Author by clapping!