வெளியிடப்பட்ட நேரம்: 05:35 (06/04/2017)

கடைசி தொடர்பு:08:25 (06/04/2017)

பிரச்னையை முடித்துவைக்க வாருங்கள். அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அழைப்பு!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகளால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க  அதிபர் ட்ரம்ப்  விரும்புகிறார் என, ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. “இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளில் வன்முறையும் பயங்கரவாதமும் இல்லாத சூழலில் தீர்வு காண்பதில், இந்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை. மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை” என்று  திட்டவட்டமாகக் கூறியது இந்தியா.

ஆனால், அமெரிக்காவின் கருத்தை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது. வாஷிங்டனில், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி கூறுகையில், “தெற்காசியாவில் அமைதியையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்ய வேண்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம். அது, இந்தப் பிராந்தியத்துக்கு நல்லதாக அமையும். அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவு பராமரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது” என்றும் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க