Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டு நாடுகளை அதிரவைத்த ஐஎஸ் தீவிரவாதிகள்!

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், நேற்று ஒரே நாளில் சிரியா மற்றும் ஈராக் ஆகிய இரண்டு நாடுகளிலும் வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

ISIS

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர், மரண தண்டனை பாணியில் சிரியாவில் 33 பேரைக் கொலைசெய்துள்ளதாக, லண்டனைச் சேர்ந்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கடுமையான ஆயுதங்கள்மூலம் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.  இதில் உயிரிழந்தவர்கள், 18 முதல் 25 வயது உடையவர்கள் ஆவர். அவர்கள், சிரிய அரசாங்கத்தின் படைகள் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல ஈராக்கில் 22 பேரையும் ஐ.எஸ் இயக்கம் கொன்றுள்ளது.  ஈராக்கில் ராணுவ உடையில் இருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், பொது மக்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 31 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்குப் பின், ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் நேற்று ஒரே நாளில் நடந்துள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement