வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (06/04/2017)

கடைசி தொடர்பு:16:37 (06/04/2017)

பொண்ணுங்க லேட்டா கல்யாணம் பண்ணா ‘க்யூட்'டா குழந்தை பிறக்குமாம்!

பெண்கள் பொறுத்திருந்து திருமணம் செய்வதால் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், சிறந்த புத்திசாலியாகவும் பிறக்கும் என இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்யானம்


பொறுத்திருந்து திருமணம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சரியான எடையுடனுன், சிறந்த அழகுடனும், நல்ல புத்திசாலியாகவும், வாசிப்புப் பழக்கம் நிறைந்தும், கணக்கில் புலியாகவும் பிறக்கும் என இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பல்கலைக்கழகம் தனது ஆய்வு முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இப்பல்கலைக்கழக ஆய்வில் இந்தியாவின் கிராமம், நகர்ப்புறம் என 32,000 பெண்களிடம் சர்வே நடத்தி கருத்து கேட்டுள்ளனர். இந்தியாவில் சரியான திருமண வயதாக பெண்ணுக்கு 18 வயது என்றும், ஆண்களுக்கு 21 வயது என்றும் சட்டம் உள்ளது. ஆனால் குழந்தைத் திருமணம் அதிகளவில் இந்தியாவில் இன்று வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

தேசிய குற்றவியல் பதிவுகளின் தரவுகளின் அடிப்படையில் குழந்தைத் திருமணம் குறித்து அதிக புகார்கள் வந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு குழந்தைகள் உரிமை கருத்துக்கணிப்பின்படி வட இந்தியாவில் மட்டும் 35 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.