மெது வடைக்கு நேர்ந்த அவமானம் | Is that a shame for Vada? - Gordon Ramsay

வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (06/04/2017)

கடைசி தொடர்பு:20:18 (06/04/2017)

மெது வடைக்கு நேர்ந்த அவமானம்

இந்தியர் ஒருவர் செய்த மெதுவடைக்கு ட்விட்டரில் கலாய்த்து பதில் வெளியிட்டுள்ளார் உலகப்புகழ் சமையல் நிபுணர் கார்டன் ராம்சே.

வடை

 

இந்தியர் ஒருவர் தன் வீட்டில் செய்த மெதுவடையை சாம்பார் சட்னியுடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்தார். அதோடு இல்லாமல் அந்நபர்  உலகப் புகழ்பெற்ற சமையல் நிபுணர் கார்டன் ராம்சே-விடம் ’எப்படி என் சாம்பார் வடையும் தேங்காய் சட்னியும்? மதிப்பிடுங்கள் ராம்சே!’ எனக் கேட்டு கார்டன் ராம்சே பெயரை இணைத்துவிட்டார். இதற்கு பதில் ட்வீட் செய்த ராம்சே, ‘சிறையிலிருந்து தங்களால் எப்படி ட்வீட் செய்ய முடிகிறது?’ என நக்கலாக பதிலளித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் பிறந்தவரான ராம்சே, தற்போது பிரிட்டனின் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர். தொலைக்காட்சிகள், விழாக்கள் என எப்போதும் பிஸியாக அசத்தி வருபவர். நம் தமிழ்நாட்டுக்கு ஷெஃப் தாமு மாதிரி பிரிட்டனில் ராம்சே. ஆனால் இவருக்கு உலக அளவில் வரவேற்பு பல மடங்கு அதிகம்.

நம்ம ஊர் சாம்பார் சட்னியுடன் கூடிய வடையை கலாய்த்துள்ள ராம்சே இப்படிச் செய்வது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் ரசிகர்கள் பலர் அவரவர் செய்த உணவுகளைப் புகைப்படத்துடன் வெளியிட்டு கருத்து கேட்டால் எல்லாவற்றையும் நக்கலடித்து பதில் வெளியிடுவார். சில சமயங்களில் கடினமான வார்த்தைகள்கூட வந்துள்ளன. 'செய்வதற்கு ஒன்றும் இல்லை' எனப் பலரும் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.