ஸ்வீடனில் நடந்த தாக்குதலுக்கு மோடி கண்டனம்!

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் நேற்று தாக்குதல் நடைபெற்றது. இதில் மூன்று பேர் உயிர் இழந்ததாக ஸ்வீடன் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ஸ்வீடன்

ஸ்டாக்ஹோல்ம் நகரில் உள்ள  குயின்ஸ் என்ற வீதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.  7-ம் தேதி மதியம் சுமார் மூன்று மணி  அளிவில் இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமும் அடைந்தனர். ஒரு லாரியுடன் டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு புகுந்து சேதம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க, பலர் காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்தை சுற்றி வளைத்த காவல்துறையினர் மக்களை மீட்டனர். இது பயங்கரவாதிகளின்  தாக்குதல் என அந்நாட்டு பிரதமர்  ஸ்டீபன் லோஃப்வென் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும், இந்தத் துயரமான நேரத்தில் ஸ்வீடனுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!