எகிப்து தேவாலயத்தில் குண்டு வெடிப்பு: 21 பேர் பலி

எகிப்தில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் குண்டு வெடித்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெய்ரோவில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்பிற்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

bomb

இன்று காலை எகிப்தில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. அதிகளவிலான கிறிஸ்தவர்கள் தேவாலயம் வரும் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தலைநகர் கெய்ரோவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டான்டா என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு எதிராக புரட்சி வெடித்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், இஸ்லாமிய அமைப்புகள் அங்கிருக்கும் கிறிஸ்தவர்களை குறி வைக்கின்றனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்து நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து எகிப்து தரப்பில், 'குண்டு வெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எகிப்து நாட்டிற்கு போப் பிரான்சிஸ் வரவுள்ளதால் இத்தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம்' என கூறப்படுகிறது. மேலும், குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் . டிசம்பர் மாதம் கெய்ரோவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் 29 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!