Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோமாலிய கடற்கொள்ளையர்களைத் துரத்தியடித்த  இந்தியா-சீனா கடற்படையினர்!

ஏடன் வளைகுடா ( Gulf of Aden) பகுதியில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை இந்திய, சீன கடற்படைகள் இணைந்து மீட்டுள்ளனர்.

somaliya pirate, india china navies
 

துவாலு (Tuvalu) நாட்டைச் சேர்ந்த ’எம்.வி.ஓ.எஸ்.35’ என்ற சரக்கு கப்பல், ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பலில், பிலிப்பைன்ஸை சேர்ந்த 19 பணியாளர்கள் இருந்தனர். ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச்சென்று பணம் பறிப்பது வழக்கம். நேற்று அவ்வழியாகச் சென்ற எம்.வி.ஓ.எஸ்.35 சரக்குக் கப்பலையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர்.

கப்பல் அதிகாரிகள், உதவி கோரி அபாய எச்சரிக்கை அனுப்பியுள்ளனர். இந்தியா மற்றும் சீன போர்க் கப்பல்கள், ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. கொள்ளையர்கள், கப்பலை சிறைபிடித்த தகவலை அறிந்த இந்தியா மற்றும் சீன கடற்படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றுள்ளனர். இந்தியா மற்றும் சீன கடற்படையினர் இணைந்து, சிறப்பாகச்  செயலாற்றி கப்பலை மீட்டனர். சோமாலிய கடற்கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். மீட்புப் பணி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, சீன கடற்படைத் தளபதிகளும், இந்திய கடற்படைத் தளபதிகளும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement