வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (12/04/2017)

கடைசி தொடர்பு:13:53 (12/04/2017)

இந்தியாவில் அதிகரித்த மரண தண்டனைகள். ஆனால் நிறைவேற்றப்படவில்லை!

இந்தியாவில், 2016-ம் ஆண்டு விதிக்கப்பட்ட மரண தண்டனைகள் அதிகம் என்றபோதும், ஒரு தண்டனைகூட நிறைவேற்றப்படவில்லை என ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பு தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

execution

 

லண்டனை தலைமையிடமாகக்கொண்ட ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பு, ‘மரண தண்டனைகளும் நிறைவேற்றமும்- 2016’ என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2015-ம் ஆண்டைவிட 2016-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகமான மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில்தான் 2016-ம் ஆண்டு ஒரு மரண தண்டனைகூட நிறைவேற்றப்படவில்லை.

அம்னெஸ்டியின் இந்த ஆய்வில், அதிகளவில் மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சீனா உள்ளது. ஆனால், தண்டனைகளின் எண்ணிக்கையை சீனா ரகசியமாக வைத்துள்ளது. மேலும், அதிக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் பாகிஸ்தானில், இந்த வருடம் அந்த எண்ணிக்கை 73 சதவிகிதம் குறைந்துள்ளதாக அம்னெஸ்டி குறிப்பிட்டுள்ளது.

உலகில், 2016-ம் ஆண்டில் மட்டும் 1032 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், அதிகப்படியான தண்டனைகள்  ஈரான், ஈராக், சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.