அணு ஆயுத சோதனைக்குத் தயாராகிறதா வட கொரியா! திடுக்கிடும் தகவலால் பதற்றம்! | Is North Korea preparing for nuclear test?

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (13/04/2017)

கடைசி தொடர்பு:17:25 (13/04/2017)

அணு ஆயுத சோதனைக்குத் தயாராகிறதா வட கொரியா! திடுக்கிடும் தகவலால் பதற்றம்!

Kim Jong Un

சில நாள்களுக்கு முன்னர், 'அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும்' என்று வட கொரிய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், 'கொரிய கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலில், அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் விமானம் உள்ளது என்று அமெரிக்கா பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தத் தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவில் இருக்கும் 38 நார்த் என்ற அமைப்பு, 'வட கொரியாவை செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் எடுத்ததில் அந்த நாடு அணு ஆயுத சோதனைக்கு ஆயத்தமாகி வருவது போல் தெரிகிறது' என்று கூறியுள்ளது. இந்த முறை வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தினால், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு அந்நாடு நடத்தும் 6-வது அணு ஆயுத சோதனையாக இது அமையும்.

அதே நேரத்தில், அமெரிக்காவும் வட கொரிய தீபகற்பத்தை நோக்கி தொடர்ச்சியாக தன் ராணுவத்தை அனுப்பிய வண்ணம் உள்ளது.