மலாலாவுக்கு கனடாவின் கெளரவக் குடியுரிமை!

இளம் வயதில் நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய்க்கு, கனடா கெளரவக் குடியுரிமை வழங்கியுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு, இதற்கான சான்றிதழை மலாலாவிடம் அளித்தார். கனடாவின் கெளரவக் குடியுரிமையைப் பெறும் ஆறாவது நபரான மலாலா, இளம் வயதில் இந்த சிறப்பைப் பெற்றவர் ஆவார்.

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு உடன் மலாலா

கெளரவக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட மலாலா, "கனடா நாட்டின் நண்பனாக இந்த கெளரவக் குடியுரிமையைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும், மனிதத்துக்காகவும், அகதிகளுக்காகவும், அமைதிக்காகவும் குரல் கொடுக்கும் கனடாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய இவரது சாதனையைப் பாராட்டி, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தனது 17-வது வயதில் இந்தப் பரிசை வென்றதன்மூலம், இளம் வயதில் நோபல் பரிசு வென்றவர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதராகவும் இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!