Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வயதில் மூத்தவர்களுக்கு இலவச கல்வி: அமெரிக்காவில் அறிமுகம்

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வயதில் மூத்தவர்களுக்கு கல்லூரி கல்வி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு நாட்டிலேயே முதன்முறையாக அறிவித்துள்ளது.

டென்னிஸி

 

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் 24 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் இலவசமாகக் கல்வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ல் நாட்டில் வேலை பார்ப்போர் மக்கள்தொகையில் அனைவரும் ஏதாவது ஒரு பட்டப்படிப்போ அல்லது பட்டயப்படிப்போ படித்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுவதாக அம்மாநில ஆளுநர் பில் ஹஸ்லாம் தெரிவித்தார்.

2018-ம் ஆண்டிலிருந்து செயல்படவிருக்கும் திட்டத்தில் கல்விக் கட்டணம், கல்லூரி நிர்வாகக் கட்டணம் என எல்லாச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இதற்கான மசோதா அங்குள்ள அவைகளில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவிலேயே இம்மாதிரியான இலவச கல்வித் திட்டம் முதன்முறையாக டென்னிஸி மாகாணத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement