விருந்தளித்து துபாய் குருத்வாரா கின்னஸ் சாதனை!

இந்தியாவிலேயே பஞ்சாப் மக்கள்தான், நல்ல காரியங்களுக்காக நிதியை அள்ளி வழங்குவதில் முதலிடம் வகிப்பவர்கள்.  இந்தியாவில் நன்கொடையாக பெறப்படும் நிதியில் குறிப்பிட்ட சதவிகிதம் சீக்கிய மக்களிடம் இருந்தே பெறப்படுகிறது. 

சீக்கியர்களின் குருத்வராக்களில் 24 மணி நேரமும் இடைவிடாமல் சமயலறைகள் இயங்கிக் கொண்டிருக்கும். அமிர்தரசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. அதுபோல், உலகம் முழுக்க உள்ள குருத்வாராக்கள் அன்னதான பணியை மேற்கொள்கின்றன. 

துபாயில் குருநானக் தர்பார் என்ற குருத்வாரா உள்ளது. இந்த குருத்வாராவில் நேற்று காலை உணவு சாப்பிட 101 நாடுகளைச் சேர்ந்த 600 பேர் பங்கேற்றனர். இது புதிய கின்னஸ் சாதனை ஆகும். உலகிலேயே பல நாட்டைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் ஒருங்கே அமர்ந்து உணவு உண்ட வகையில் கின்னஸ் புத்தகத்தில் இந்த குருத்வாரா இடம் பெறுகிறது. கடந்த 2015ம் ஆண்டு மிலன் நகரில் நடந்த உணவுத் திருவிழாவில் 55 நாட்டைச் சேர்ந்த மக்கள் ஒருங்கே அமர்ந்து உணவு உண்டது பழைய சாதனை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!