வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி!

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.  

North korea
 

வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனை மற்றும் அணு ஆயுதச் சோதனை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்காவின் எச்சரிக்கையை வடகொரியா பொருட்படுத்தவில்லை. வடகொரியா தன் ஆயுத பலத்தை பெருக்கி வருகிறது. 

கடந்த வாரம் அமெரிக்கா  சிரியா ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதே போன்று வடகொரியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.  ’அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் நாடுகளை வாழ விட்டுவிட மாட்டோம்’ என வடகொரியா அமெரிக்காவை  எச்சரிக்கும் விதமாக தெரிவித்தது. 

இந்த சூழலில் தான் வட கொரியா இன்று காலை ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை  தோல்வியில் முடிந்துள்ளதாக முதலில் தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டது. இச்செய்தியை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!