Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பலூசிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுக்கு அடிமையாகாது- பலூசிஸ்தான் முதல்வர் திட்டவட்டம்!

’பலூசிஸ்தான் என்றுமே இந்தியாவின் அடிமையாகாது’ என அம்மாகாண முதல்வர் நவாப் சனாலுல்லா ஜெரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பலூசிஸ்தான்

 

பாகிஸ்தானின் முக்கிய மாகாணமான பலூசிஸ்தானின் முதல்வர் தங்கள் மாகாணம் என்றுமே பாகிஸ்தானுடன் சகோதரத்துவம் பேணி இருக்குமே தவிர இந்தியாவுக்கு ஒருபோதும் அடிமையாய் இருக்காது என அம்மாகாண முதல்வர் அறிவித்துள்ளார். 

பலூசிஸ்தானில் நடந்த நான்காவது ‘ஜாகிர் தியாகிகள்’ நினைவு நாளினை முன்னிட்டு அம்மாகாண முதல்வர் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், ’பலூசிஸ்தான் மக்கள் என்றுமே பாகிஸ்தானுடன் சகோதரர்களாக வாழ்கிறார்கள். என்றுமே இந்தியாவுக்கு அடிமையாக வாழமாட்டோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், பலூசிஸ்தானில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையை விடுமாறு அறிவுறுத்திய பலூசிஸ்தான் முதல்வர் அம்மாகாணத்தில் நடக்கும் கிளர்ச்சிகளை இந்தியா ஆதரித்து வருகிறது என குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக மறுத்து வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement