லண்டனில் விஜய் மல்லையா கைது!

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

vijay mallya

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு.

இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீது இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில், விஜய் மல்லையாவைக் கைதுசெய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவி கோரியிருந்தது இந்திய அரசு. வேண்டுகோளை ஏற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீஸார், அவரை இன்று கைதுசெய்துள்ளனர். கைதான அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!