இவர்களுக்குத்தான் இனி H1B விசா: ட்ரம்ப் அதிரடி!

H1B விசா கட்டுப்பாடுகளில் புதிதாக, ’தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்' என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப்

H1B விசா, அனைவருக்கும் எளிதாகக் கிடைக்காமல் இனி தகுதி உள்ளவருக்கு மட்டுமே வழங்கப்படும்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது, அமெரிக்காவின் புதிய கொள்கை. அதாவது, ‘அமெரிக்கரை மட்டுமே வேலைக்கு எடுப்போம்’ என்கிற புதிய திட்டம். அந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை  உருவாக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் தேர்தல் வாக்குறுதியே இதன் அடிப்படையில்தான் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில், தொழில்நுட்பப் பொறியாளர்கள் பலரும் வெளிநாட்டவர்களே. முக்கியமாக, இந்தியர்கள் அந்தப் பணிகளில் அதிகம் பணியாற்றுகின்றனர். எனவே, அதிகமாக உள்ளூர்வாசிகளைப் பணியமர்த்தவேண்டியே, H1B விசா கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுவருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!