வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (19/04/2017)

கடைசி தொடர்பு:17:29 (19/04/2017)

ஸ்னாப்சாட்டை குறி வைத்து தாக்கிய சக்கர்பெர்க்!

ஸ்னாப்சாட் சி.இ.ஓ ஸ்பீகலின் கருத்தை கேலி செய்யும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஸ்னாப்சாட் சி.இ.ஓ ஸ்பீகல் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை கூறியதாக தகவல் வெளியானது. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் ஸ்னாப்சாட்டை விரிவுபடுத்தும் திட்டமில்லை எனவும் இது பணக்காரர்களுக்கான ஆப் எனவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஸ்பீகலை தாக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நாங்கள் புதிதாக கண்டுபிடிக்கும் யாவும் பணக்காரர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மக்களுக்குமே' என அவர் கூறியுள்ளார். மேலும், ஃபேஸ்புக் லைட் போன்ற தளங்கள் குறைவான இணையதள வசதிகள் கொண்ட நாடுகளுக்காகவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.