வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (20/04/2017)

கடைசி தொடர்பு:14:23 (20/04/2017)

அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட காந்தி ஸ்டாம்ப்!

லண்டனில், மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த ஸ்டாம்ப், அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 'இந்திய தபால்தலைகளிலேயே அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gandhi stamps

லண்டனில் நடைபெற்ற ஏலத்தில், மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நான்கு தபால்தலைகள் கொண்ட தொகுப்பு 500,000 பவுண்டுகளுக்கு (சுமார் 4 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டாம்ப் சேகரிப்பாளர் ஒருவர், இந்தத் தொகுப்பை வாங்கியுள்ளதாக, ஏலம்விடுத்த நிர்வாகி ஸ்டான்லி கிப்பன்ஸ் தெரிவித்துள்ளார்.

10 ரூபாய் மதிப்புள்ள 1948-ம் ஆண்டின் தபால்தலைகள், மொத்தமாகவே 13 தாம் சுழற்சியில் உள்ளன. இவற்றில் நான்கு மட்டும் சேர்ந்த தொகுப்பாக இருந்ததால்தான் அரிதான சேகரிப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.