’பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீஃபுக்கு இன்று தீர்ப்பு! | SC's verdict on Nawaz Sharif's Panama Papers scam

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (20/04/2017)

கடைசி தொடர்பு:16:48 (20/04/2017)

’பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீஃபுக்கு இன்று தீர்ப்பு!

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் மற்றும் அவரின் மகன்களுக்கு இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

நவாஸ்

பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையாதாகக் கூறப்படும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கில், இன்று தீர்ப்பு வழங்க  உள்ளது, இது பாகிஸ்தான் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுக்காக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப்  பெயரும் சிக்கியுள்ளது.

நவாஸ் ஷரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள் மீது பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுமென பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது.

பாகிஸ்தானில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், நவாஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரின் மீது வெளியாக இருக்கும் ஊழல் வழக்கின் தீர்ப்பு, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில் நவாஸ் ஷரீஃப் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாதக் காரணத்தால் அவரை பிரதமர் பதவியிலிருந்து எல்லாம் நீக்க முடியாது என அறிவித்துள்ளது. ஆனால் பணப்பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.