வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (20/04/2017)

கடைசி தொடர்பு:14:49 (20/04/2017)

திருமணம் செய்ய வலியுறுத்தி ஒபாமா மகளை துரத்திய இளைஞர்!

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகளை இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய வற்புறுத்தி துரத்திவந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாலியா

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மாலியா ஒபாமா. 18 வயதான மாலியா நியூயார்க் நகரில் மான்ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவியாகப் பணியாற்றி வருகிறார்.

தினமும் பணிக்குச் சென்று வரும் மாலியாவை இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய வலியுறுத்தி பின் தொடர்ந்து வந்துள்ளார். முதலில் இதை அவ்வளவு பெரிய விஷயமாக மாலியா எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் தொடர்ந்து அந்த இளைஞன் மாலியாவைத் தொடருவதைக் கண்ட அவரது பாதுகாவலர்கள் அந்த இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் ப்ரூக்ளின் பகுதியைச் சேர்ந்த ஜேர் நில்டன் கார்சோடா. 30 வயதான கார்சோட ஒபாமா ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் வசித்து வந்த காலத்திலேயே மாலியாவை பார்க்க முயற்சித்துள்ளார்.