வீடியோ மூலம் அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா | North Korea warns US

வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (20/04/2017)

கடைசி தொடர்பு:18:04 (20/04/2017)

வீடியோ மூலம் அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

அணு ஆயுத சோதனை செய்து வருவதால், வடகொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலை மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, வட கொரியாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் போர் கப்பல்கள், கொரிய தீபகற்பத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு வடகொரியாவும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், வட கொரியா நாட்டை தோற்றுவித்த தலைவரான கிம் சங்கின் பிறந்தநாளையொட்டி, அங்கு பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற அறையில் ஒரு வீடியோ ஒளிபரப்பாகியது, அந்த வீடியோவில் வடகொரியா, தனது ஏவுகணை மூலம் அமெரிக்காவைத் தாக்குவது போல காட்சிகள் உள்ளன. குறிப்பாக, ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கா வெடித்து, அதன் தேசியக் கொடி கல்லறை மீது போர்த்தப்பட்டுள்ளது போல அந்த காட்சி முடிகிறது.

 

 

இதன்மூலம், தற்போது நிலவி வரும் சூழலுக்காக, அமெரிக்காவை வடகொரியா எச்சரித்துள்ளது.